Blog and video in English here.
ஆங்கிலத்தில் விடியோவைவும் வலைப்பதிவையும் இங்கு பார்க்கவும்.
Dr. ஜேசன் ∴பங் வீடியோ – இங்கு
மருத்துவர் ஜேசன் ஃபுங்க்–இன் வீடியோ பதிவிலிருந்து நான் கற்று கொண்டவைகள்:
மேலும் மேலும் மருந்துகள்
உங்களுக்கு சர்க்கரை நோய் (நீரிழிவு) உள்ளது என்று ஆரம்ப பரிசோதனையில் தெரிய வந்தால்,
– மருத்துவர் பரிந்துரைக்கும் மிக வலு குறைந்த மருந்து மெட்ஃபொர்மின் ஆகும்.
– சிறிது நாட்களுக்குப் பிறகு, அதிக வீரியம் கொண்ட வேறு மருந்து கொடுப்பார்.
– இன்னும் சிறிது நாட்களுக்கு பின், பல மருந்துகளின் கூட்டு கலவையாக அளிக்கப்படும்.
– பிறகு கொஞ்சம் இன்சுலின்.
– பின் இன்னும் கொஞ்சம் அதிகமாக இன்சுலின்.
– பின் மேலும் அதிகமாக இன்சுலின்.
நாம் ஏன் மருந்து உட்கொள்கிறோம்? நலமடையத்தானே! அதிகமாக மருந்த எடுத்துக்கொண்டால் ஒருவரின் ஆரோக்கியம் மேம்பட வேண்டும் அல்லவா? ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் விஷயத்திலோ, நிலைமை வேறாக உள்ளது. அளவிற்கதிகமான மாத்திரைகளை உட்கொள்வதால் ஆரோக்கியம் மேலும் பாதிப்படைகிறது.
யாரேனும் நம்மிடம் நான் மெட்ஃபொர்மின் எடுத்துகொள்கிறேன் என்றால் அவருக்கு லேசான சர்க்கரை உள்ளது என்று அறிந்து கொள்வோம் அல்லவா? அது போல நான் இன்சுலின் எடுத்துகொள்கிறேன் என்றால் அவருக்கு சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளது என்று நன்கு அறிவோம்.
இவ்வளவு மாத்திரைகளை உண்ட பிறகும் நோயோ முற்றிய நிலையிலேயே உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் ஆனால் சர்க்கரை நோய் முற்றி இருக்கும்.
மூலக்காரணமும் அறிகுறியும்
- சர்க்கரை நோயின் காரணம் இன்சுலின் எதிர்ப்பு.
- சர்க்கரை நோயின் அறிகுறி இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு.
மூலக்காரணங்களுக்கும் அறிகுறிகளுக்கும் உள்ள தொடர்பை விளக்க மருத்துவர் ஃபுங்க் இரு உதாரணங்களை முன் வைக்கிறார்.
நோய் தொற்றும் காய்ச்சலும்
உங்களுக்கு காய்ச்சல் வரும் பொழுது மருத்துவர் உங்களை பரிசோதித்து எதனால் நோய்த் தொற்று ஏற்பட்டதென்று ஆராய்ந்துஅதற்குரிய மருந்தினை பரிந்துரைப்பார். இதனால் நோய் தொற்று குறைவதுடன் காய்சலும் குறைகிறது.
ஒரு வேளை மருத்துவர் காய்ச்சலுக்கான பாராசிட்டமாலை மட்டும் கொடுத்து விட்டு நோய் முறிப்பானை மறந்து போனால் நோய் எவ்வாறு குணம் அடையும்?
நீங்கள் வாழ் நாள் முழுவதும் பாராசிட்டமாலை உண்ண வேண்டும் .ஆனால் காய்ச்சலுக்கு காரணமான நோய் தொற்று அப்படியே தான் இருக்கும். “காய்ச்சல் நன்றாக குறைந்து விட்டது.எனவே இதே மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள் ” என்று உங்கள் மருத்துவர் கூறினால் நீங்கள் மீண்டும் அவரிடம் செல்ல யோசிப்பீர்கள் அல்லவா? அப்படியானால் சர்க்கரை நோய்விஷயத்தில் மட்டும் அவ்வாறான அனுகுமுறையை எவ்வாறு சகித்துக்கொள்கிறீர்கள்?
உங்கள் சர்க்கரை அளவு சீராக இருப்பதாக மருத்துவர் கூறுவார்.ஆனாலும் இதில் சோகமான விஷயம் என்னவென்றால்உங்களுக்கு இருதயம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதே. ஏனேனில் நோய்க்கான காரணத்திற்கு மருந்தளிக்காமல் வெறும் அறிகுறிகளுக்கு மட்டும் மருந்து கொடுப்பதின் விளைவே அது.
மதுவும் குடிகாரனும்
சர்க்கரை நோயாளிக்கு இன்சுலின் கொடுப்பது என்பது குடிகாரருக்கு மது (ஆல்கஹால்) கொடுப்பதை போல் தான். ஆல்க்கஹால் எவ்வாறு குடிகாரரை நலமாக இருப்பது போல் உணரச்செய்து அவர் நோயை மேலும் மோசமாக்குகிறதோ அது போல இன்சுலினும் சர்க்கரை நோயாளியின் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டும் கட்டுப்படுத்துகிறதே ஒழிய இன்சுலின் எதிர்ப்பாற்றலை சீர்படுத்துவதில்லை. குடிகாரர் தன்னை நலமாக உணர எவ்வாறு மேலும் மேலும் ஆல்கஹால் தேவையோ அது போல இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க மேலும் மேலும் இன்சுலினும் தேவைப்படுகிறது.
வெறும் அறிகுறிகளுக்கான வைத்தியத்தின் விளைவாக மக்கள் அதிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
***********
மேலே கூறப்பட்ட உதாரணங்களை வைத்து இன்றைய சர்க்கரைக்காண சிகிச்சை எவ்வாறு மேம்போக்காக அறிகுறிகளை மட்டும் கணக்கில் எடுத்து கொள்கிறது என்று கண்டோம். இதற்கு மாற்றாக மருத்துவர் ஃபுங்க் அவர்கள் சில சீறிய சிந்தனைகளை முன் வைக்கிறார்.
சர்க்கரை நோய் சிகிச்சைக்கான பரிந்துரைகள்
1) இன்சுலின் அளவை குறைப்பதே நமது இலக்கு, அதிகரிப்பது அல்ல.
2) சர்க்கரை நோய் என்பது உணவு சம்பத்தப்பட்ட நோய், எனவே நாம் சாப்பிடும் உணவை சீரமைப்பதன் மூலமே சர்க்கரை நோயை சரிசெய்ய முடியும்.
3) சர்க்கரை நோய் காலப்போக்கில் முற்றும் நோய் அல்ல.
சரியான விதத்தில் சிகிச்சை அளித்தால் எளிதில்குணம் பெற முடியும். சர்க்கரையிலிருந்து விடுதலை பெற எளிய வழி அடிக்கடி நோன்பு இருப்பதே. இதை பல ஆயிரம் ஆண்டுகளாக எல்லா மதங்களாலும் வலியுறுத்தப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. (தனிப்பட்ட முறையில் என்னுடைய அனுபவம் என்னவென்றால் LCHF என்ற உணவு பழக்க முறையில் நோன்பு இருப்பது மிகவும் எளிதானதே).
நீங்கள் நோன்பு இருக்கும் போது இன்சுலின் அளவு குறைகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் சிகிச்சையின் விஷச் சுழல் என்னவென்றால்:
இன்சுலின் —> இன்சுலின் எதிர்ப்பு —> மேலும் இன்சுலின் —> இன்சுலின் எதிர்ப்பு. நீங்கள் நோன்பு இருக்கும் பொழுது இந்த சங்கிலி உடைகிறது. எனவே இன்சுலின் அளவும் குறைகிறது.
உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு (கொலெஸ்டெரால்), உடற்பருமன், மன அழுத்தம், போன்றவை எல்லாம் அதிக இன்சுலின் அளவால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் (metabolic syndrome) விளைவாகும்.
இன்சுலின் அளவை குறைக்கும் வழிகள்
1) அடிக்கடி நோன்பு இருத்தல்
2) உணவில் பண்படுத்தப்பட்ட கார்போஹய்ட்ரேட்டின் அளவை குறைத்தல்.
3) அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை (இயற்கையான கொழுப்பு) உண்ணுதல் இன்சுலின் அளவை வெகுவாக குறைக்கும்
4) நார் சத்து
5) வினிகர்
6) பட்டை போன்ற வாசனைப் பொருட்கள் (spices) மற்றும் மூலிகைகள்(herbs). நெல்லிக்காய்ப்பொடி மற்றும் பாகற்காய்ப்பொடி இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில்எனக்கு நல்ல பலனை அளித்தன.
ஆங்கிலத்தில் பார்க்க/ English blog