இன்றைக்கு நாம் கொலெஸ்டெரால் என்னும் கொழுப்பை பற்றி பார்க்கப் போகிறோம். கொழுப்பை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். கொழுப்பு என்றாலே கெட்ட வார்த்தையை போல ஆக்கிவிட்டார்கள். கொழுப்பினால் மாரடைப்பு, இருதய நோய், உடல் பருமன், ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டாவதாக நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, HDL, LDL, triglycerides அதன் விகிதாச்சாரங்கள் போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
- கொழுப்பு என்றால் என்ன?
- அது நல்லதா கெட்டதா?
- கொழுப்பிற்கும் இருதய நோய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா?
- கொழுப்பிற்கும் மாரடைப்பிற்கும் என்ன சம்பந்தம்?
- நாம் உட்க்கொள்ளுகிற உணவுகளில் கொழுப்பு இருக்க வேண்டுமா? கூடாதா?
- எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும்? சரியான அளவு எது?
என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த வீடியோ பதிவிலிருந்து பதிலை அறிந்துக் கொள்ளலாம் – http://www.fathead-movie.com/
Fat Head என்னும் டாக்குமென்டரி படத்திலிருந்து சில பகுதிகளை விளக்கி இருக்கிறேன். அதை உருவாக்கியவர் Tom Naughton. மேலே கூறப்பட்டுள்ள வெப்சைட்டுக்கு கூட சென்று நீங்கள் பார்க்கலாம்.
கொழுப்பு பற்றிய அனுமானங்கள்
– நிறைவுற்ற கொழுப்புகளால் இரத்தத்தில் கொலெஸ்டெராலின் அளவு கூடுகிறது.
-இரத்தத்தில் அதிக கொலெஸ்டெரால் இருந்தால் இருதய நோய் உண்டாகும்.
i) முதற் கூற்று தவறு என்பதற்கான ஆதாரங்கள்
நாம் எல்லோரும் இவ்வளவு நாட்கள் அது உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த அனுமானங்கள் முற்றிலும் தவறானது என்று அறிவியல் எழுத்தாளர் கேரி டாப்ஸ் (Gary Taubes), சுவீடிஷ்அ றிவியலாளர் உ∴ப்பி ராவ்ன்ஸ்கவ் (Uffe Ravnskov) மற்றும் பிரிட்டிஷ் டாக்டர் மால்கம் கென்ர் (Malcolm Kendrick) முதலானவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆய்வறிக்கைகளை கூர்ந்து ஆராய்ந்து, இது ஒரு போலியான தகவல் என்று நிரூபித்து இருக்கிறார்கள். மேலும் “∴பிரேமிங்ஹாம் ஆய்வு” (Framingham study) பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் என்ன சொல்கிறார் என்றால் – இந்த நூற்றாண்டில் அறிவியற் சமூகத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் என்றே கூறுகிறார். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் நிர்வாக இயக்குனரே, அதிக கொழுப்புள்ள அல்லது நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால் இரத்தத்தில் கொலெஸ்டெராலின் அளவு குறைந்து காணப் படுவதாக கூறியுள்ளார்.
ஆக கொழுப்பு நிறைந்த உணவுகளால் இரத்தத்தில் கொலெஸ்டெரால் அளவு கூடுவதில்லை என்பது தெளிவாகிறது.
ii) இரண்டாவது கூற்று தவறு என்பதற்கான ஆதாரங்கள்
இரண்டாவது அனுமானமான அதிக கொலெஸ்டெரால் தான் இருதய நோய்களுக்கான காரணம் என்பதை பற்றி பார்ப்போம். நிறைவுற்ற கொழுப்புகள் தான் இரத்தக் குழாய்களின் அடைப்பிற்கு முழுமுதற்க் காரணம் என்பது ஒரு பொய். கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொண்டவர்களுக்கும், கொழுப்புள்ள உணவுகளை உண்டவர்களுக்கும் ஏற்படுகிற மாரடைப்பின் சதவீதம் பார்த்தீர்களென்றால் ஒரே மாதிரி தான் இருந்தது. மைக்கெல் டிபேக்கி (Michael Debakey) என்னும் மருத்துவர் சுமார் 1700 நோயாளிகளின் பதிவுகளை வைத்து ஆராய்ந்ததில், கொலெஸ்டெரால் எனப்படும் கொழுப்பிற்கும், இருதய நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி இருக்கிறார். டுவைட் ஐசனோவருக்கு(Dwight Eisenhower) மாரடைப்பு வந்தபோது, அவருடைய கொலெஸ்டெராலின் அளவு வெறும் 165 தான். இதிலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம், இந்த அனுமானம் எவ்வளவு தவறானது என்று .
இருதய நோய்க்கு கொலெஸ்டெரால் காரணம் இல்லையென்றால், வேறு என்ன தான் காரணமாக இருக்க முடியும்?
கொழுப்பு இருதய நோய்க்கு காரணம் இல்லை. ஆக்சிஜனேற்றம் அல்லது உயிரகமேற்றம் எனப்படும் ஆக்ஸிடேஷன் (oxidation) மற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கமும் (inflammation) தான் காரணம். கொலெஸ்டெரால் இருதய நோயை குணப்படுத்துவதற்காக அதன் மேல் செயல்படுகிறது. மாரடைப்பு உள்ள பல நோயாளிகளின் கொலெஸ்டெரால் அளவு சரியான அளவாக இருந்த போதும் அவர்களுக்கு குழாய்களில் வீக்கத்திற்கான அறிகுறிகளை காண முடிந்தது.
நம் மேல் திணிக்கப்பட்ட பொய்கள்
LDL எனப்படும் கெட்ட கொழுப்பு நிறைய இருந்தால், அவை நம் இரத்தக் குழாய்களை குறுகலாக்கி அடைத்துவிடும். அப்பொழுது HDL எனப்படும் நல்ல கொழுப்பு அவைகளை நீக்கி, குழாய்களின் அடைப்பை சரி செய்து விடும் என்பது தான் நாம் நீண்ட காலம் நம்பிக்கொண்டிருந்த மிக எளிய பொய்.
நாம் மிக முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள்
- LDL மற்றும் HDL என்பது கொலெஸ்டெரால் கிடையாது. அவை கொலெஸ்டெராலை சுமந்து செல்லும் புரதம் (புரோடீன்கள்). LDL என்பது கொலெஸ்டெராலை கல்லீரலிருந்து தசைகளுக்கு எடுத்து செல்லும் வாகனம். HDL என்பது தசைகளிருக்கும் பழைய கொலெஸ்டெராலை மறுசுழற்சிக்காக கல்லீரலுக்கு எடுத்து செல்லும்.
- HDL நல்ல கொழுப்பு என்று நமக்கு தெரியும்.நமக்கு நிறைய HDL தேவையாய் இருந்தால் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுவதில் பயனே இல்லை. அவைகளை அதிகப்படுத்த வேண்டுமானால் நிறைவுள்ள கொழுப்புவகை உணவுகளை நாம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- LDL வகை கொலஸ்டரால்கள் எல்லாமே கெட்டது கிடையாது. அவைகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. ஒன்று சிறிய அடர்த்தியான LDL. மற்றொன்று பெரிய, பஞ்சு போன்று மிருதுவான LDL. சிறிய LDL களால் தான் பிரச்சினை உருவாகிறது. பெரிய, அடர்த்தி குறைந்த LDL களால் பிரச்சினை இல்லை.
- இருதய நோய் அதிக கொலெஸ்டெரால்களால் ஏற்படுவதில்லை மாறாக இரத்தக் குழாய்களில் ஏற்படும் புண்களாலும், வீக்கங்களாலும் ஏற்படுகின்றன. புண்கள் ஏற்படும் போது அதை சரி செய்யவே LDL கள் முயற்சிக்கும். ஆனால் அங்கு ஆக்சிஜினேற்றம் செய்யப்படும் போது தட்டையான தகடு போன்ற பொருட்களாக மாறி இரத்த குழாய்களை அடைத்து விடுகின்றன.
- சிறிய, அடர்த்தியான LDL கள் உருவாகக் காரணம் கார்போஹைட்ரைட்டுக்கள். நம் உணவில் கார்போஹைட்ரைட்டுகளை குறைப்பதன் மூலமாக சிறிய , அடர்த்தியான LDL கள், பெரிய, அடர்த்தி குறைந்த LDL களாக மாறிவிடுகிறது என்று பல ஆராய்ச்சிகளில் தெளிவாகி விட்டது.
- கொலஸ்டராலின் எண்ணிக்கை முக்கியம் கிடையாது . அதன் வடிவம் தான் பிரச்சினை.
புகைபிடித்தல், இரத்த சர்க்கரை அளவு, மனஅழுத்தம் போன்றவை இரத்தக் குழாய்களில் வீக்கத்தை ஏற்படுத்தி சேதப்படுத்தி இருதய நோயை உண்டாக்கும். இவைகள் கொலெஸ்டெராலையும் அதிகப்படுத்தும். இவை இரண்டும் ஒன்றாய் நடப்பதனால் “இருதய நோய்களுக்கு கொலெஸ்டெரால் தான் காரணம்” என்று கூறுவது எப்படி இருக்கிறது என்றால்: நிறைய குற்றங்கள் நடக்கும் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையத்திற்கு நிறைய போன் கால்கள் வரும். நிறைய போன் கால்கள் வருவதால் தான் குற்றம் நடக்கிறது என்றும், எனவே குற்றத்தை தடுக்க வேண்டுமெனில், காவல் நிலையத்திற்கு யாரும் போன் பண்ணக்கூடாது என்பது போல் இருக்கிறது.
1988ல் கொழுப்பு பற்றிய நிரூபிக்கப்படாத அனுமானங்களை (lipid hypothesis) நிரூபிக்க முயன்றார்கள். பதினோரு வருடங்களுக்கு பிறகும் அது உண்மை என்று நிரூபிக்க போதுமான ஆதாரங்களை அவர்களால் தர இயலவில்லை. கிட்டத்தட்ட இந்த ஆராய்ச்சிக்கான செலவு மட்டும் சுமார் நூறு மில்லியன் டாலர்கள். இந்த lipid hypothesis க்குஎதிரான தரவுகளை கொண்ட ஆராய்ச்சிகளை புறம்தள்ளியதோடல்லாமல், அந்த தரவுகளை தங்கள் தியரிக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதற்கு பின்னால் மிகப் பெரிய அரசியலும், வணிகமும் இருக்கிறது. 1980 களில் மெக்கவர்ன் நிர்வாக குழு (McGovern committee) எல்லாரையும் ஒரு முட்டையளவிற்கான கொலெஸ்டெரால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்த சொன்னது. ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள், போதிய மருத்துவ ஆதாரம் இல்லாத lipid hypothesisஐ ஏற்றுக்கொள்ள மறுத்துவிடவே , அவர்கள் அனைவரும் பால் மற்றும் கொழுப்பு உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிவிட்டார்கள் என்று புதுக் கதையை அவிழ்த்துவிட தயாரானது. நாம் எல்லோரும், நம்மை அறியாமலேயே, ஒரு மிக பெரிய அறிவியல் சோதனைக்கு எலிகளாய் இருந்திருக்கோம் பல பத்தாண்டுகளாக!
USDA (United States Dept.of Agriculture) வேளாண்மையை வணிகமாக்குகிற முயற்சிகளில் இருந்த நேரம் அது. அதனால் lipid hypothesisஐ மையப்படுத்தி, தங்கள் உணவுக் கட்டுப்பாடு பற்றிய கையேட்டை வெளியிட்டார்கள். நிறைய பேருடைய பிழைப்பு இந்த நிரூபிக்கப் படாத இந்த lipid hypothesisஐ நம்பி தான் இருக்கு! கொலெஸ்டெராலை குறைக்க உதவும் மருந்தான ஸ்டாடின் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும், கொலெஸ்டெரால் அளவு 200 க்கும் கீழே இருக்க வேண்டும் என்று கூறும் விஞ்ஞானிகளுக்கும் இடையே நிதி சம்மந்தப்பட்ட உறவு இருப்பதை பார்க்க முடிந்தது.
கொலெஸ்டெரால் ஏன் தேவை?
- நோய் எதிர்ப்பு சக்திக்கு கொழுப்பு தேவை.
- மூளைக்கு கொழுப்பு தேவை .
- தோல்,முடி , நகம் போன்ற எல்லாவற்றிக்கும் கொழுப்பு தேவை.
- செக்ஸ் ஹார்மோன்களுக்கு கொழுப்பு தேவை செக்ஸ் ஹார்மோன்களுக்குள்ளேயே கொலெஸ்டெரால் இருக்கிறது.
- அறுபது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், எந்த வயதான பெண்களுக்கும் இவர்கள் சொல்லுகிற கொலெஸ்டெரால் ஒரு பிரச்சனையே அல்ல. எந்த அளவிற்கு கொலெஸ்டெரால் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நீண்ட ஆயுளோடு இருக்க முடியும்.
எந்த வயது பெண்களாக இருந்தாலும் statin என்கிற கொலெஸ்டெரால் குறைப்பு மாத்திரையை உட்கொள்ளுவதில் எந்த பயனும் இல்லை. அதனால் ஏற்படுகிற பாதிப்புக்களும் மிக அதிகம். ஞாபகமறதி, தசைகளில் வலி, எலும்புப்புரை (osteoporosis) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறைந்த அளவு கொலெஸ்டெரால் இருப்பவர்களிடத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மனஅழுத்தம், தற்கொலையுணர்வு, வன்முறை உணர்வு, பக்கவாதம், கேன்சர் போன்ற நோய் தன்மைகள் இருப்பதை கண்டார்கள். எனவே குறைந்த அளவு கொலெஸ்டெராலைக் காட்டிலும், அதிக கொலெஸ்டெரால் இருப்பதே நல்லது.
இதைப் பற்றிய தகவல்களை மேலும் தெரிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்களை பாருங்கள்:
- How you got fat – https://youtu.be/mNYlIcXynwE
- The manipulation of statin statistics (watch for 4 minutes till 43:10) – https://youtu.be/yX1vBA9bLNk?t=39m30s
- Watch the entire video, if you want to know more.
- The Cholesterol Conundrum and Root Cause Solution – https://youtu.be/fuj6nxCDBZ0
- Separating fat from fiction – https://youtu.be/uCRginYo4rk
மேலும் படிக்க:
$29 Billion Reasons to Lie About Cholesterol – http://articles.mercola.com/sites/articles/archive/2012/02/01/29-billion-reasons-to-lie-about-cholesterol.aspx
Cholesterol myths – http://www.ravnskov.nu/cholesterol/
Cholesterol myths free online book – http://www.ravnskov.nu/cm/
Lowering cholesterol increases death – https://drmalcolmkendrick.org/2016/04/13/greater-cholesterol-lowering-increases-the-risk-of-death/
Lowering cholesterol has no effect on heart disease – https://drmalcolmkendrick.org/2016/04/10/lowering-cholesterol-has-no-effect-on-heart-disease/