டீனா மற்றும் நாட்சி லாசரஸ் அவர்களின் LCHF பற்றிய முதல் வலையொளிக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
எங்களுடைய இந்தியன் LCHF பக்கம் மற்றும் யூடூப்பில் நீங்கள் கொடுத்துள்ள ஆதரவிற்கு நன்றி. இந்த வலையொளி நீங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் பலர் அளித்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. பலருடைய சந்தேககங்களுக்கு பதில் சொல்லும் விதமாகவும் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவுமே இவ்வலையொளி உருவாக்கப்பட்டுள்ளது.
இது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் உள்ளது. இதற்காக உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை ஒரு சாதாரண மனிதன் தனக்கு உள்ள சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளும்படியாக அமைத்திருக்கிறோம்.
என்னுடைய (நாட்சி லாசரஸ்) உடல் பருமன் அதிகமாக இருப்பதால் ஒரு சராசரி மனிதருக்கு உள்ள அக்கறையுடனும் ஆர்வத்துடனும் இதில் அனுபவம்பெற்ற டீனா அவர்களிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்வோம். நீங்களும் உங்களுடைய சந்தேகங்களை இங்கே தெளிவு படுத்திக்கொள்ளலாம்.
1) LCHF என்றால் என்ன?
முதலாவதாக LCHF என்பது என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொண்டால் புதிதாக கேட்பவர்களுக்கும் எளிமையாக இருக்கும்.
LCHF என்பது low carbohydrate high fat உணவு முறை அதாவது குறைந்த கார்போஹைடிரேட் மற்றும் அதிக கொழுப்பு என்பதாகும். இங்கு கார்போஹைடிரேட் என்பது மாவு பொருள் கொழுப்பு என்பது நல்ல கொழுப்பை குறிக்கும் மேலும் மிதமான புரதம் என்பதும் இதில் அடங்கும்.
இது ஒரு உணவு முறை. உணவுமுறை என்பது ஒருசில நாட்கள், வாரங்கள், அல்லது ஒருசில மாதங்கள் மட்டும் கடைபிடித்துவிட்டு மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறிவிடுவது என்பதே பலரது நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் இது வாழ்நாள் முழுவதும் பின்பற்ற கூடிய விஷயம் ஆகும்.
வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தல் என்பது பலருக்கு கடினமானதாக இருந்தாலும், ஒருவருடைய எடை, இரத்த சர்க்கரை அளவு, இரத்த கொதிப்பு, இன்சுலின் அளவு, பிற கொழுப்புகள், இதய துடிப்பின் அளவு ஆகியவற்றை மனதில் கொண்டு இதனை கடைபிடிக்கவேண்டும். இவற்றின் முறையான அளவீடுகள் சரியாக இருக்கும் வரை இந்த உணவு முறையை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இது சுலபமானதும், மகிழ்ச்சியானதும் ஆகும்.
2) LCHF பற்றிய அடிப்படை கருத்துக்கள்
வாகனங்கள் இயங்க எரிபொருள் தேவைப்படுவதுபோல் உடல் இயங்க சக்தி தேவை. இந்த சக்தி நாம் உண்ணும் உணவிலிருந்தே பெறப்படுகிறது . இது நான்கு வழிகளில் பெறப்படுகிறது.
- Carbohydrate எனப்படும் மாவுசத்து
- Protein எனப்படும் புரதசத்து
- Fat எனப்படும் கொழுப்பு
- Alcohol எனப்படும் மது/சாராயம்.
இதில் ஆல்கஹால் தவிர மற்றவற்றை பரிந்துரை செய்கிறேன். இவற்றை எந்தெந்த விகிதாசாரங்களில் எடுத்துக்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். நமக்கு ஆரம்ப நாட்களில் இருந்தே தவறாக, அதாவது குறைவான கொழுப்பு அதிகமான கார்போஹைட்ரெட் மிதமான புரதம் என்றே கற்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் LCHFல் 70% – 80% ஆற்றல் கொழுப்பிலிருந்து பெறப்படுகிறது. 20% -30% புரதத்திலிருந்தும் 10% கார்போஹைட்ரடேட்டிலிருந்தும் பெறப்படுகிறது.
இதில்குறிப்பிடப்படும் சதவிகிதம் உணவு அளவுகள் அல்ல. இவை ஆற்றல் அளவுகள்.
பெரும்பான்மை பை சார்ட் (pie chart) வரைபடங்களில் காட்டப்படுவதுபோல் 70% கொழுப்பை எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் 70% ஆற்றல் தரக்கூடிய நல்ல கொழுப்புகளை குறைவான அளவில் எடுத்துக்கொள்ள முடியும். இரண்டாவது புரதம், மூன்றாவது கார்போஹைட்ரெட். மாவு சத்து, இதனை காய்கறிகளில் இருந்தே பெறமுடியும். இதனை நல்ல நார்சத்துதுகளாக பெறமுடியும். கார்போஹைடிரேடுகளில் வெவ்வேறு விதங்கள் இருக்கிறது. மேலும் தானிய வகைகளில் இருந்தும் மாவு சத்து பெறப்படுகிறது. சிறுதானியங்கள், தீட்டப்படாத தானியவகைகள் ஆகியவை நல்லது என்பது தவறான கருத்து . அவற்றை எடுத்துக்கொள்வது தவறு. இது ஏன் என்பது பற்றி வரும்வலையொளி பதிவுகளில் பார்க்கலாம்.
ஏன் LCHF? எதற்காக LCHF?
நாம் ஏற்கனவே கடைப்பிடித்து வரும் ஒரு உணவு பழக்கத்திலிருந்து ஏன் LCHFக்கு மாற வேண்டும். இது வரை நாம் பழகி வந்தது ஒரு அளவீடுமுறை. குறைந்த அளவு உணவு அதிகமான உடற்பயிற்சி என்ற அளவீடுமுறை. மேலும் எல்லாவற்றிற்கும் அளவீடு, கணக்கீடு… உடற்பயிற்சி மையங்கள் என எல்லாமே இருந்தும் உடல் எடை மட்டும் குறையவே இல்லை. எங்கு பார்த்தாலும் குண்டான மனிதர்களை தான் காண முடிகிறது. இதே ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு அவ்வாறு இல்லை.
தற்போது இளம் வயதிலேயே இரத்த கொதிப்பு, சர்க்கரை, இருதய நோய்கள் என வரிசை காட்டி நிற்கின்றன. எவ்ளோவா உடற்பயிற்சிகள், உணவுமுறை மாற்றங்கள், என மக்கள் தங்களை கஷ்டப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனாலும் எத்தனை செய்தாலும் எதுவும் மாறவில்லை.
இந்த LCHF உணவு முறை ஏன் என்றால் இவ்வளவு நாள் நாம் செய்தது எதுவும் வேலை செய்யவில்லை. ஆனாலும் குண்டாகி கொண்டே இருக்கின்றோம்.
இதை நான் அழகியலோடு ஒப்பீடு செய்யவில்லை. மாறாக உடல் பருமன் என்பதை உடநல குறைவின் ஒரு அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே உடல் பருமனை ஒரு அசிங்கமான, அழகு குறைவான விஷயமாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. மேலும் இதில் நாம் விவாதிப்பது உணவு பழக்கத்தினால் வரும் உடல் பருமனை பற்றியது தான். வெகு சிலருக்கு வேறு மருத்துவ காரணங்களும் இருக்கலாம். நாங்கள் விசாரித்து அறிந்த வரையில் இது பெரும்பான்மையோருக்கு உணவு பழக்கங்களினாலேயே ஏற்படுகிறது.
குறைவான கார்போஹைட்ரெட் அதிகமான கொழுப்பு என்பதே நமது பழைய உணவுமுறை ஆகும். கடந்த 60 – 70 ஆண்டுகளில் தான் குறைவான கொழுப்பு, அதிகமான உடற்பயிற்ச்சி (உடற்பயிற்சி) என மாறியுள்ளோம். நமது முன்னோர்களை பார்த்தோமேயானால் விலங்குளை உண்பது, வருடத்தில் இருமுறை விளையக்கூடிய பயிர்களை உண்பது என்றே வாழ்ந்து வந்துள்ளனர்.விவசாயம் என்பது வந்தபிறகே தானியங்களை உணவாக உட்கொண்டனர். ஆனால் தற்கால சூழலில் விரைவாக விளையக்கூடியது, குட்டையாக வளரக்கூடியது என மறபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அவர்கள் மாற்றம் செய்து உண்ண ஆரம்பித்தனர். மேலும் தற்கால உணவுமுறையில் நல்லவற்றை எடுத்துவிட்டு தேவையில்லாதவற்றை உண்கிறோம்.
LCHF உணவு முறைக்கு வேறு பெயரும் உண்டு. அது பாலியோலிதிக் எனப்படும். அதாவது பாலியோலிதிக் (ஆதி) மனிதன் உட்கொண்ட உணவுகளான விலங்குகள், அவைசார்ந்த கொழுப்புகள், காய்கள், பழங்கள் ஆகியவை ஆகும் . இவை தான் பலியோ உணவுமுறை. இதனை கீட்டோஜெனிக் உணவுமுறை என்றும்சொல்லலாம்.
எனவே LCHF ஐ பரிந்துரைக்க காரணங்கள்
1. இதுதான் நமது முன்னோர் கடைபிடித்த உணவுமுறை.
2. இதுவரை நாம் கடைப்பிடித்த உணவுமுறை பலனளிக்கவில்லை.
எனவே பலனளிக்காத ஒன்றை பிடித்துக்கொண்டிருப்பதை விட பலன்தர கூடிய புதிய முறையை முயற்சித்து பார்ப்பதில் தவறில்லை. மேலும் இவை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்த ஒரு விஷயத்தையே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். இதேயே நீங்களும் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழவே இந்த முன்னெடுப்பை துவக்கியுள்ளோம்.
இதுவரை இந்த பதிவை எங்களோடு இணைந்து பார்த்த உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுகுறித்த உங்களது சந்தேகங்களை info@indianlchf.com அல்லது podcast@indialchf.com என்ற மின்னஞ்சலில் கேட்கலாம்.