LCHF கடைபிடிப்பதற்கான அறிவியல் அடிப்படையில் காரணம்
நமது உடல் இயக்கத்திற்கு சக்தி (energy-எனர்ஜி) தேவை. அவை உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது. LCHF உணவு முறைப்படி குறைவான கார்போஹைட்ரேட் அதிகமான கொழுப்பு எடுத்துக்கொள்ளவேண்டும்.
இது ஏன் என்றால் கார்போஹைட்ரேட் ஆனது க்லுகோஸாக நமது இரத்தத்தில் மாற்ற படுகிறது. க்லுகோஸ் நமது இரத்தத்தில் குறிப்பிட்ட அளவே இருக்கவேண்டும். க்லுகோஸ் அதிக அளவு இருப்பது ஆபத்தானது. இந்த அளவை கண்டறிய தான் இரத்த சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. க்லுகோஸ் அளவு அதிகமாக இருக்கும்போது இன்சுலின் அதிகமாக சுரக்கிறது.
இன்சுலினுக்கு 3 செயல்பாடுகள் உள்ளன
- இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்கு படுத்துதல்
- கொழுப்பை சேகரிக்கும் பணி
- சேகரிக்கப்பட்ட கொழுப்பை உடல் உபயோகிக்கவிடாமல் தடுக்தல்
நாம் கார்போஹைட்ரேட் அதிகமாக உண்ணும் போது, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு அதிகரித்து, அதை கட்டுப்படுத்த அதிக அளவு இன்சுலின் சுரந்து, கொளுப்பை உருவாகி அதை சேகரிக்கவும் செகிறது.
எனவே நாம் உண்ணும் கார்போஹைட்ரேட் தான் உடல் பருமனை அதிகரிக்க செய்கிறது – கொழுப்பு அல்ல.
ஏன் இன்சுலினை குறைக்கவேண்டும்
கொழுப்பு உற்பத்தியையும் சேகரிப்பையும் குறைக்க நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்க வேண்டும்.
க்லைகோஜென் சேமிப்பு VS கொழுப்பு சேமிப்பு
உணவு பொருளில் இருந்து பெறப்படும் க்லுகோஸ் க்ளைகோஜென் ஆக மாற்றப்படுகிறது. க்லைகோஜென் உடலில் குறைவான அளவே சேகரிக்கப்பட முடியும். ஆனால் கொழுப்பு சேமிக்கப்பட எல்லை இல்ல. எனவே தான் உடல் பருமன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நம் உடல் முதலில் க்லைகோஜெனை தான் உபயோகிக்கும். ஏனெனில் அதனை அதிகம் சேமிக்க முடியாது. க்லைகோஜென் அதிக அளவில் இருந்தால் அது கொழுப்பாக மாற்றப்படும்.
இதனாலேயே கார்போஹைட்ரேட் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என LCHF உணவுமுறையில் சொல்லப்படுகிறது.
எப்படி இன்சுலினை குறைக்க முடியும்?
சேகரிக்கப்பட்ட கொழுப்பை உபயோகிக்க விடாமல் தடுக்கும் இன்சுலின் செயல்பாட்டை எவ்வாறு மாற்ற முடியும்?
இன்சுலின் அளவை கட்டுப்படுத்த குறைவான கார்போஹைட்ரெட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் காய்கறிகளில் இருந்து பெறப்பட்ட நல்ல கார்போஹைடிரேடுகளாக இருக்க வேண்டும். அதேப்போல குறைந்த அளவிலும் இருக்கவேண்டும். எடுத்துக்கொள்ளப்படும் கார்போஹைட்ரெட் ஆனது மாவு பொருட்களில் இருந்தோ, தானியங்களில் இருந்தோ, வெல்லம் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கக்கூடாது.
கொழுப்பு சேகரிப்பின் வகைகள்
கொழுப்பு உடலில் இருவகைகளில் சேகரிக்கப்படுகிறது.
- தோலின் அடிப்பகுதியில் (subcutaneous fat ) சேகரிக்கப்படும் கொழுப்பு – இதனால் உடல் பருமனான தோற்றம் ஏற்படுகிறது.
- VISCERAL FAT – உள்ளுறுப்பு கொழுப்பு – உள்ளுறுப்பை சுற்றி சேகரிக்கப்படும் கொழுப்புகள். இதனாலேயே fatty liver, fatty pancreas போன்றவை ஏற்படுகிறது. இவர்களுக்கு பெயர் TOFI – thin on the outside fat on the inside. இவர்கள் பார்க்க ஒல்லியானவர்களாக இருப்பார்கள் ஆனால் உடலின் உள்ளேயே கொழுப்பு சேகரிக்கப்பட்டிருக்கும்.
இதன் விளைவாகவே ஒல்லியாக இருப்பவர்களும், சிறுவயது உடையவர்களும் கூட மாரடைப்பால் இறக்க நேரிடுகிறது. இவ்வாறாக சேகரிக்கப்படும் உள்ளுறுப்பு கொழுப்பானது மிகவும் ஆபத்தானது ஆகும்.
கொப்பு சேகரிப்பை பற்றி எளிதான விளக்கம்
ஒரு ∴ப்ரிஜை (Fridge) போல் கிளைகோஜனை கற்பனை செய்யுங்கள். உங்கள் ஸ்டோர்ரூம் அல்லது அடித்தளத்தில் இருக்கும் ∴ப்ரீசரை(Freezer) உடல் கொழுப்பாக கற்பனை செய்யுங்கள்.
Fridgeன் உள்ளே உணவை வைப்பதும், வெளியே எடுப்பதும் மிகவும் எளிதானது, ஆனால் சேமிப்பு இடம் குறைவாக உள்ளது. நீங்கள் Freezerல் நிறைய உணவை சேமிக்க முடியும், ஆனால் Fridgeஉடன் ஒப்பிடும்போது அதைப் எடுப்பது மிகவும் கடினம். உங்களுக்கு அதிக இடம் தேவைப்பட்டால் ஒன்றிர்க்கும் மேற்பட்ட Freezerகளை ஸ்டோர்ரூமில் சேமிக்கலாம்.
Fridgeல் இருக்கும் உணவை முடித்தப்பின் தான் Freezerல் இருக்கும் உணவை எடுக்க முடியும். நாம் கார்போஹைட்ரேட் அதிகமாக உண்ணும் போது, Fridgeன் உணவை மட்டுமே உட்கொள்ளுகிறோம். அதில் இருக்கும் மிச்சம் Freezerருக்கு போகிறது. திரும்பவும் பசிக்கும் போது, மீண்டும் கார்போஹைட்ரேட் உண்ணுவது என்பது மறுபடியும் கடைக்கு சென்று Fridgeல் உணவை வைப்பதுக்கு சமமாகும். மிச்சத்தை திரும்பவும் Freezerருக்கு அனுப்புகிறோம். இவ்வாறு திரும்ப திரும்பச் செய்யும் போது, Freezerல் கொழுப்பு சேமிப்பு அதிகரித்து கொண்டே போகிறது.
நாம் கார்போஹைட்ரேட் உணவை குறைக்கும் போதும் மற்றும் நோன்பு எடுக்கும் போது தான் Freezerல் இருக்கும் கொழுப்பை கரைக்க முடியும்.
*****
எனவே தான் குறைவான கார்போஹைட்ரெட் அதிக கொழுப்பு உட்கொள்ளும் உணவு முறையான LCHF பரிந்துரைக்கப்படுகிறது.
RESOURCE LINKS
-
நோன்பு என்றால் என்ன – ஒரு எளிய விளக்கம் – https://www.youtube.com/watch?v=vfE3S-F-jic
-
Dr. Caryn Zinn – ‘Building Healthy Athletes… from beginner to winner – https://youtu.be/Wl2fe70Z2eA
-
Dr. Peter Brukner – ‘Why Low Carb?’ – https://youtu.be/4WPF3RMPI9k