தேவையான பொருட்கள்:
2) தண்ணீர் – 2.5 லி
3) வெங்காயம் – 2
4) பூண்டு பல் – 10
5) இஞ்சி – 5 செ.மி நீளமுள்ள துண்டை 1 செ.மி அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும்
6) பச்சை மிளகாய் – 2 துண்டுகளாக நறுக்கிய 2 மிளகாய்
7) காய்ந்த மிளகாய் – 3
8) சிக்கன் ஸ்டாக் சதுர துண்டு (chicken stock cube) -1 (தேவையெனில்)
9) கொத்தமல்லி தூள் – 1 மேஜைக்கரண்டி
10) மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
11) மிளகு தூள் – 11/2 மேஜைக்கரண்டி
12) சீரகப்பொடி – 11/2 தேக்கரண்டி
13) கறிவேப்பிலை – 3,4 கொத்து
14) வினிகர் – 1 மேஜைக்கரண்டி (அல்லது புளிப்புக்கேற்ப)
15) உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களை எல்லாம் குக்கரில் வைத்து அடுப்பில் ஏற்றவும்
- முதல் விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 2 மணி நேரம் வேகவிடவும்.
- 2 மணி நேரம் கழித்து ½ லி தண்ணீர் வற்றி சூப் 2 லி அளவுக்கு வந்துவிடும்.
- நீங்கள் பருகும் போது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மல்லித்தழை, மிளகு மற்றும் சீரகம் சேர்த்துக்கொள்ளலாம்.
- மிளகாய் மற்றும் மிளகை காரத்தின் தன்மை பொறுத்து குறைத்துக் கொள்ளலாம்.
- நீங்கள் ஃபிரிட்ஜ்ஜில் வைத்த சூப்பை எடுத்து பார்க்கும் போது ஜெல்லியின் பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைவான நேரத்தில் சமைத்திருக்கிறீர்கள் அல்லது அதிகமாக தண்ணீர் சேர்த்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
- கோழி எலும்பு சூப் மற்றும் ஆட்டு நெஞ்சு எலும்பு சூப் செய்ய 1 மணி நேரம் ப்ரஷர் குக்கரில் வைத்தாலே போதும். மாட்டு வால் சூப் அல்லது கடினமான எழும்புடைய ஆட்டுக்கால் சூப் செய்ய குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது ப்ரஷர் குக்கரில் வேக வைக்க வேண்டும்.
***********
எலும்புச் சாற்றின் நன்மைகள் (Dr. ஜேசன் ∴பங்கின் வலைத்தளத்திலிருந்து எடுத்தது)
1. கால்சியம் மற்றும் மெக்னீசியம் இதில் அதிகமாக உள்ளன. இந்த தாதுக்கள் தான்
- எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கும் உதவுகின்றன.
- இதயம் மற்றும் நரம்பு மண்டலங்களை சீர்படுத்துகின்றன.
- தசை வளர்ச்சி மற்றும் சுருக்கம்.
2. குருத்தெலும்பில் (cartilage) உள்ள கோன்ட்ராய்டின் சல்∴பேட்(chondroitin sulphate) மற்றும் க்லூகோசமீன் (glucosamine) இன்∴பலமேஷன் (inflammation), கீல்வாதம் (arthritis) மற்றும் மூட்டுவலிகளை குணமாக்குகிறது.
3. எலும்பு சூப்களில் உள்ள கொலாஜென் (collagen), செல்லுலைட் (cellulite) எனப்படும் கொழுப்பு மேடு பள்ளங்கள் உருவாவதை தடுக்கிறது.
4. எலும்பு சூப்களில் உள்ள கொலாஜென் (collagen) மற்றும் ஜெலட்டின் (gelatin) ஆரோக்கியமான முடி, தோல் மற்றும் நகம் வளர உதவுகிறது.
5. அதிக அமில சுரப்பு (hyper acidity), குடல் அழற்சி (colitis), குடல்வால் கசிவு (leaky gut), மற்றும் கிரோன் நோய் (Crohn’s disease) போன்றவற்றிற்கு நிவாரணியாகவும், ஜீரணத்திற்கு உறுதுணையாகவும் இருப்பது எலும்பு சூப்பில் உள்ள ஜெலட்டின் (gelatin) ஆகும்.
6. புண்களை ஆற்றுவதிலும், தசைகளின் வளர்ச்சி மற்றும் சீரமைப்பிலும் எலும்பு சூப்பில் ஜெலட்டினினுள்ள அமினோ அமிலங்களாகிய கிலைசீன் (glycine) மற்றும் ப்ரோலீன்(proline) முக்கிய பங்கு வகிக்கின்றன.